Friday, June 11, 2010

முல்லாவின் அறிவாற்றல்

குழந்தைகளுக்கான கதை

முல்லாவின் மேல் பொறாமை கொண்டவர்களும் அவரின் திறமையை கண்டு எரிச்சல் பட்டவர்களும் அரசரிடம் சென்று முல்லாவை பற்றி குறைத்து பேசி ,அரசர் முல்லா மேல் அளவுக்கு அதிகமா மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளதாக குறை பட்டு கொண்டனர் .

அரசர் அதற்கு பதில் அளிக்க விரும்பி ,அதே சமையம் அவர்களுக்கும் முல்லைவின் திறமையை தெரிவிக்கும் விதமாக அவர்களை நோக்கி ஒரு கேள்வி கேட்டார்
அவையில் உள்ளவர்களே ! நான் உங்களை ஒரு கேள்வி கேட்கட்டுமா

கேளுங்கள் அரசே!

அரசர் .,"நான் இப்போது கேட்கும் கேள்விக்கு சரியாக பதில் சொன்னால் அவர் கழுத்து வெட்டப்படும் ! தவறாக பதில் சொன்னால் அவர் தூக்கில் இடப்படுவார் ! என்ன தயாரா!!" என்றார் .,

எல்லோரும் திரு திரு என்று விழித்தனர் யாரும் பதில் அளிக்க முன் வரவில்லை !!

அரசர் ,முல்லாவை வரவழைத்து இதேயே அவரிடமும் கேட்டார்

அதற்கு முல்லா சற்றும் யோசிக்காமல் அரசே ."என்னை தூக்கில் இடுங்கள்" என்று சாமர்த்தியமாக பதில் கூறினார்.
இப்போது அவரை தூக்கில் போட்டால் அது சரியாகி விடும்;ஆகவே தூக்கில் போடா முடியாது
சரியென்று அவரை கழுத்தையும் வெட்ட முடியாது;என் என்றால் தூக்கில் போடுமாறு கூறுகிறார் !!
அரசர் ,பார்த்தீர்களா முல்லாவின் அறிவு திறமையை என்று எல்லோருக்கும் சொல்லி .முல்லாவுக்கு தகுந்த பரிசு அளித்து சிறப்பித்தார் .

ஆகவே குழந்தைகளே நீங்களும் இம் மாதிரி நல்ல கதைகளை கேட்டு பயன் பெறுங்கள் .

No comments:

Post a Comment